Skip to main content

பண ஆசையும், பெண் அசையும், மண்ணாசையும் — மனிதனின் சுதந்திரம் எங்கே?

 பண ஆசையும், பெண் அசையும், மண்ணாசையும் — மனிதனின் சுதந்திரம் எங்கே? “பண ஆசையும், பெண் அசையும், மண்ணாசையும் ஒரு மனிதனைக் கட்டுப்படுத்துகிறது; அவனுடைய சுதந்திரத்தைப் பறித்து விடுகிறது.” இந்த சில வரிகள் சாதாரண கவிதை அல்ல. இது மனித வாழ்க்கையின் ஆழமான உண்மையை நம்மிடம் சொல்லும் ஒரு கண்ணாடி. மனிதன் பிறக்கும் போது அவன் முழுமையான சுதந்திரத்துடன் பிறக்கிறான். அவனுக்கு எல்லாம் புதிது — ஆசைகள் இல்லை, போட்டி இல்லை, ஒப்பீடு இல்லை. ஆனால் காலம் செல்ல செல்ல, அவன் மனதில் மூன்று சக்திவாய்ந்த ஆசைகள் உருவாகின்றன: பணம், உறவு (அன்பு/காதல்), சொத்து. இந்த மூன்றும் வாழ்க்கையை அமைக்க உதவுகின்றன. ஆனால் அதே நேரத்தில், அளவை மீறினால் அவை மனிதனின் சுதந்திரத்தையே கட்டிப்போடும் சங்கிலிகளாக மாறுகின்றன. இந்த கட்டுரையில், இந்த மூன்று ஆசைகள் எப்படி மனிதனை வழிநடத்துகின்றன, எப்போது அவை அவனை அடிமைப்படுத்துகின்றன, மற்றும் உண்மையான சுதந்திரம் எங்கே இருக்கிறது என்பதை ஆழமாகப் பார்க்கலாம். --- மனிதன் மற்றும் ஆசை – இயல்பான உறவு ஆசை என்பது தவறு அல்ல. உண்மையில், ஆசை இல்லாமல் முன்னேற்றமே இல்லை. ஒரு மாணவன் நல்ல மதிப்பெண் பெற ஆசைப்ப...

வாழ்க்கை தத்துவங்கள் | philoshopy quotes


இளமையில் வரும்

வறுமையும்,

முதுமையில் வரும்

செல்வமும்

துன்பத்தை தரும்...!



பண ஆசையும்,

பெண் ஆசையும்,

மண்ணாசையும்

ஒரு மனிதனைக்

கட்டுப்படுத்துகிறது,

அவனுடைய 

சுதந்திரத்தைப் 

பறித்து விடுகிறது...!



பணத்தை இழந்தால்

மறுபடியும் சம்பாதித்துக்

கொள்ளலாம், ஆனால்

ஒழுக்கத்தை இழந்தால்

மீண்டும் பெற முடியாது.



சந்தோசம் வெளியில்

இல்லை, நாம் இருக்கும்

இடத்திலே தான் உள்ளது.

உள்ளத் திருப்தி, சின்னச்

சின்ன உதவி செய்தல், 

பிறரிடம் அன்பாக 

நடந்து கொள்ளுதல், 

மிதமான பேச்சு,

பிறருக்குத் தொல்லை

இல்லாமல் இருத்தல்,

கடன் வாங்காமை, இவை

தான் சந்தோசமாகும்....!



கஷ்டப்பட்டு 

சம்பாதித்த

பணம் தேவை

இல்லாததிற்கு செலவு

செய்யக்கூடாது...

சேமிப்பு மிக முக்கியம்.

சிக்கனமும் ஒரு

வருமானம் தான்.

ஆடம்பரச் செலவு

அழிவைத் தரும்....!



அதிகமான 

துக்கமும் பேசாது,

அதிகமான 

சந்தோசமும் பேசாது. 

குறைந்த துக்கம் 

உள்ளவன் புலம்பிக் 

கொண்டே இருப்பான்...! In



நல்ல அறிவாளிகள்

துக்கத்தையோ

சந்தோசத்தையோ

பெரிதாக எடுத்துக்

கொள்வதில்லை.

இரண்டுமே அவர்களுக்கு

ஒன்று தான்...!




நிம்மதியாக இருக்க

வேண்டுமென்றால்,

கண்டதையும் 

கேட்டதையும் பிறரிடம்

சொல்லக் கூடாது.

தனிப்பட்ட ரகசியம்

எதையும் கேட்டுத்

தெரிந்துக் கொள்ளக்

கூடாது....!



நாம் செய்யும் 

வேலையை பிறரிடம் 

ஒப்படைக்கக் கூடாது... 

பிறர் செய்யும்

வேலையில் குற்றம்

குறைகளை குத்திக்

காட்டக் கூடாது....!




நல்லவர்களின் நட்பு

நன்மையளிக்கும்

ஆனால் தீயவர்கள்

நட்பு உயிருக்கே

உலை வைக்கும்...!



உழைப்பின் மூலம்

தான் செல்வம் வரும்.

தர்மத்தின் மூலம் 

தான் அது நிலைக்கும்.

செல்வத்தை தான் 

மட்டும் அனுபவிக்காமல்

எல்லோருக்கும் உதவும் 

படிச்செய்ய வேண்டும்....! 




சிரிப்பதற்கு நேரம் 

ஒதுக்குங்கள்,

அது இதயத்தின் இசை.

சிந்திப்பதற்கு நேரம் 

ஒதுக்குங்கள்

அது சக்தியின் பிறப்பிடம்.

விளையாட நேரம் ஒதுக்குங்கள்,

அது இளமையின் ரகசியம்.

படிக்க நேரம் ஒதுக்குங்கள்,

அது அறிவின் ஊற்று.

நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்,

அது மகிழ்ச்சிக்கு வழி.

உழைக்க நேரம் ஒதுக்குங்கள்,

அது வெற்றியின் விலை.





கடவுளிடம் 

அது வேண்டும்

இது வேண்டும் என்று

கேட்கத் தேவை இல்லை.

அவருக்குத் தெரியும்

நமக்கு என்னென்ன

தேவை என்று, 

மனிதர்களை நம்புவதை

விட கடவுளை 

நம்புவது மேல்....!




பொறுமையைக் 

காட்டிலும்

உயர்ந்த தவம் இல்லை,

திருப்தியைக் காட்டிலும்

உயர்ந்த இன்பம் இல்லை,

ஆசையைக் காட்டிலும்

உயர்ந்த தீமை இல்லை,

கருணையைக் காட்டிலும்

பெரிய அறம் இல்லை,

மன்னித்தலைக் காட்டிலும்

ஆற்றல் மிக்க

ஆயுதம் இல்லை....!



கஷ்டங்கள் 

மனதிற்கு

வலிவூட்டும்.

உழைப்பு 

உடலை 

உறுதியாக்கும்...!




உள்ளத்தில் உறுதி,

இடைவிடாத முயற்சி,

தன்னம்பிக்கை

ஆகியவை 

வாழ்க்கையின்

வெற்றிக்கு 

அஸ்திவாரமாக 

இருக்கும்...!



சுற்றத்தார் அனைவரும்

சுயநலம் உள்ளவர்கள்,

விலகி வாழ்வது 

நிம்மதியைத் தரும்....!



தனக்கு எது

கெடுதியோ 

அதைப் பிறருக்குச் 

செய்ய நினைக்க

கூடாது...!



நாம் இஷ்டப்பட்டதை

கடவுள் கொடுக்க 

மாட்டார். நமக்கு 

தேவையானதைக்

கொடுப்பார்.

அதற்கு உன்னை

தகுதி உள்ளவனாக

மாற்றிக்கொள்ள

வேண்டும்...!




உனக்கு நல்ல

யோசனைகளை

உன்னால் தான்

தர முடியும்... 

பிறர் தரும் 

யோசனைகளை

ஆராயாமல் ஏற்றுக்

கொள்ளக்கூடாது...!




முகஸ்துதி செய்பவர்களை

நம்பக் கூடாது,

சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி

இனிமையாக 

பேசுபவர்களை

நம்பக் கூடாது,

கசப்பாயிருந்தாலும் 

உண்மை 

பேசுபவர்களை நம்பலாம்....!




சந்தேகம் ஒரு 

தொற்று நோய்.

அது விரோதியாக 

இருந்து மகிழ்ச்சியைக்

கெடுக்கும். யாரையும்

காரணமின்றி

சந்தேகப்படக் கூடாது...!




மகிழ்ச்சியோடு

சுமந்தால் எந்தப் 

பாரமும் குறைவாக

இருக்கும்...!




விரோதிக்கு 

மன்னிப்பு

கொடுக்கலாம், 

ஆனால்

நண்பனாக ஏற்றுக் 

கொள்ளக் கூடாது..!



கவலை 

ஆயுளைக் 

குறைக்கும். 

எதைப்பற்றியும் 

கவலைப்படக் கூடாது. 

நடப்பது நடக்கட்டும் 

என்று அமைதியாக 

இருக்க வேண்டும்...!




உடல் வலிகளுக்கு

மருந்திடுங்கள்

மன வலிகளுக்கு

மறந்திடுங்கள்...! In 



நல்ல நாக்கு ஒரு 

நல்ல ஆயுதம் அதை

தவறான வழியில் 

உபயோகிக்கக் கூடாது.



உருவத்தைக் 

கண்டு

மயங்கக் கூடாது,

அழகான முகம்

கொடூரமான 

உள்ளத்தை

மறைத்து விடும்...!



பிறர் உதவி 

செய்வார்கள் என்று 

எண்ணி சும்மா 

இருந்து விடக்கூடாது. 

நமது பத்து விரல்கள்

தான் உண்மையான

நண்பர்கள்....! 




பணிவும் அடக்கமும்

தான் நிம்மதியான

வாழ்க்கையைத் தரும்,

ஆணவமும் ஆடம்பரமும்

வாழ்க்கையைச் 

சீரழித்து விடும்...!




வாழ்க்கை 

எப்போதும்

ஆபத்து 

நிறைந்தது

நாம் எதற்கும் 

தயாராக இருக்க 

வேண்டும்...!



சோம்பேறிகளுக்கு 

இடையில் 

சுறுசுறுப்பாக

இருப்பவர்களும்,

பொய் 

பேசுபவர்களுக்கு

இடையில் உண்மை

பேசுபவர்களும்,

கெட்டவர்களுக்கு

இடையில் வாழும்

நல்லவர்களும் 

துன்பம்

அடைவார்கள்...!



அன்பானவர்கள் 

பிறரை மகிழ்வித்து

தான் மகிழ்ச்சி

அடைவார்கள், ஆனால்

அன்பில்லாதவர்கள்

பிறரைத் துன்பப்படுத்தி

தான் மகிழ்ச்சி 

கொள்வார்கள்...!




அன்பானவர்களிடம்

எதைக் கேட்டாலும்

இருப்பதைக் கொடுத்து

விடுவார்கள், ஆனால்

அன்பில்லாதவர்கள் 

சிறிய பொருளைக்கூட 

கொடுக்கமாட்டார்கள்,

பேராசைக் கொண்ட

சுயநலவாதியாக

இருப்பார்கள்...!




அன்பானவர்கள் 

இல்லத்தில் 

அன்பாக எதைக்

கொடுத்தாலும்

உண்ணலாம், ஆனால்

அன்பில்லாதவர்கள்

இல்லத்தில் எதைக்

கொடுத்தாலும்

உண்ணக்கூடாது...!



இளமையில் 

கல்லாத செயல் 

தீமை தரும்,

வருவாய் இல்லாத 

போது தர்மம் 

செய்வது

தீமை தரும்,

சுற்றத்தார் 

இல்லாதபோது

கோபமடைவது 

தீமை தரும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

நிலையற்ற வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்...!

நிலையற்ற வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் முன்னுரை மனித வாழ்க்கை என்பது ஒரு நிரந்தர பாதை அல்ல. இன்று நம்மிடம் இருப்பது நாளை இல்லாமல் போகலாம். இன்று சிரிப்பை தருவது, நாளை கண்ணீராக மாறலாம். இதை புரிந்துகொள்ளாமல், வாழ்க்கையை நிரந்தரம் போல நம்பி வாழும் போது தான் அதிகமான வலியும் ஏமாற்றமும் உருவாகிறது. நிலையற்ற வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என்பது நம்பிக்கையின்மை அல்ல; அது வாழ்க்கையை உணர்ந்து வாழ கற்றுக்கொள்ளும் ஒரு உயர்ந்த விழிப்புணர்வு. வாழ்க்கை ஏன் நிலையற்றது? வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை. காலம் மாறுகிறது, சூழ்நிலைகள் மாறுகின்றன, மனிதர்களும் மாறுகிறார்கள். இன்று நம்முடன் இருப்பவர்கள் நாளை தூரமாகலாம். இன்று நம்மை மதிப்பவர்கள் நாளை மறக்கலாம். இளமை முதிர்ச்சியாக மாறுகிறது ஆரோக்கியம் நோயாக மாறுகிறது செல்வம் வறுமையாக மாறுகிறது உறவுகள் தூரமாக மாறுகின்றன இந்த மாற்றங்களே வாழ்க்கையின் இயல்பு. நிலையற்ற வாழ்க்கையின் மீது அதிக நம்பிக்கை வைத்தால் என்ன நடக்கும்? 1. ஏமாற்றம் அதிகரிக்கும் நிரந்தரம் என நினைத்து நம்பியவை மாறும் போது, மனம் உடைந்து விடுகிறது. 2. மனிதர்கள் மீது...

மனிதன் ஏன் அவனது துக்கத்தில் கண்ணீர் விடுகிறான்?

மனிதன் ஏன் அவனது துக்கத்தில் கண்ணீர் விடுகிறான்? முன்னுரை மனிதனின் வாழ்க்கையில் கண்ணீர் என்பது தவிர்க்க முடியாத ஒரு உணர்வு வெளிப்பாடு. சிரிப்பைப் போலவே, அழுகையும் மனித இயல்பின் ஒரு பகுதியாகவே உள்ளது. ஆனால் சிரிப்பு பெரும்பாலும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறதென்றால், அழுகை இன்னும் பலரால் பலவீனத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. உண்மையில், மனிதன் ஏன் அவனது துக்கத்தில் கண்ணீர் விடுகிறான்? அந்த கண்ணீர் எங்கிருந்து உருவாகிறது? அது உடலின் செயலா, மனதின் மொழியா, அல்லது இரண்டின் சேர்க்கையா? இந்த கட்டுரை மனிதனின் அழுகையின் பின்னால் இருக்கும் உணர்ச்சி, மனநிலை, உயிரியல் காரணங்கள், சமூக பார்வை மற்றும் அதன் ஆழமான அர்த்தங்களை விரிவாக ஆராய்கிறது. கண்ணீர் என்றால் என்ன? கண்ணீர் என்பது கண்களில் உருவாகும் ஒரு திரவம் மட்டும் அல்ல. அது மனிதனின் மனநிலையை வெளிப்படுத்தும் மிக நேர்மையான மொழி. சில வார்த்தைகளை சொல்ல முடியாத நேரங்களில், கண்ணீர் அவற்றை சொல்லி விடுகிறது. உடலியல் ரீதியாக, கண்ணீர் கண்களின் ஈரத்தன்மையை பாதுகாக்க உருவானாலும், உணர்ச்சி ரீதியான கண்ணீர் முற்றிலும் வேறுபட்டது. மனிதன் துக்கத்தில்...

மகிழ்ச்சியான வாழ்க்கை – முழுமையான வழிகாட்டி.

  மகிழ்ச்சியான வாழ்க்கை – முழுமையான வழிகாட்டி.  முன்னுரை மகிழ்ச்சி என்பது ஒருவருக்கு ஒரு முறை கிடைக்கும் பரிசு அல்ல. அது தினமும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு வாழ்க்கை முறை. பலர் வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் மகிழ்ச்சியில்லாமல் வாழ்கிறார்கள்; சிலர் மிகக் குறைவாக இருந்தும் மனநிறைவுடன் வாழ்கிறார்கள். இந்த வேறுபாட்டிற்கு காரணம் சூழ்நிலை அல்ல, சிந்தனை மற்றும் மனநிலை தான். இந்த article-ல், மகிழ்ச்சி என்றால் என்ன, அது ஏன் அவசியம், மகிழ்ச்சியாக இருப்பதனால் ஏற்படும் நன்மைகள், மகிழ்ச்சியை நிலைத்திருக்கச் செய்யும் வழிமுறைகள், மற்றும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கிடையே மகிழ்ச்சியை எப்படி பாதுகாப்பது என்பதைக் கூர்ந்து பார்க்கப் போகிறோம். மகிழ்ச்சி என்றால் என்ன? மகிழ்ச்சி என்பது வெளியில் இருந்து வரும் ஒன்றல்ல. அது நம்முடைய மனதிற்குள் உருவாகும் ஒரு உணர்வு. சந்தோஷம், திருப்தி, மன நிம்மதி ஆகிய மூன்றும் சேர்ந்த நிலை தான் உண்மையான மகிழ்ச்சி. சந்தோஷம் – ஒரு நிகழ்வால் உடனடியாக வரும் உணர்வு திருப்தி – வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும் மனநிலை மன நிம்மதி – உள்ளுக்குள் இருக்கும் அமைதி இந்த மூன்றும் ஒன்றாக ...