புரிதல்..!
புரிந்துக் கொண்ட
உறவுகளிடத்தில்
பிரிவுகளுக்கு என்றும்
இடம் இல்லை...!
இதயத்தில் வாழ்பவள்..!
என் இதயத்தில்
இருப்பவள்....!
என் நினைவுகளில்
வாழ்பவள்....! ஆனால்
நிஜத்தில் என்னுடன்
வாழாதவள்....! அவளும்
என் முன்னாள் காதலி....!
காதல்..!
காதலிக்காக கவிதை
எழுதவில்லை - நான்
காதலிப்பதால்
எழுதுகிறேன், என்
கவிதை எழுத்துக்களை...!
உள்ளம்..!
என் உடல் எங்கு
சென்றாலும்
என் உள்ளம்
உன்னிடத்தில்
மட்டுமே உள்ளது....!
என் கடவுள்..!
கடவுளை நினைக்காமல்
உன்னையே நினைத்துக்
கொண்டிருப்பதால்
கடவுளுக்கு என் மீது கோபம்,
கோபித்தால் கோபித்துக்
கொள்ளட்டும்...... ஆனால்
கடவுளுக்கு தெரியாது நீ தான்
என் கடவுள் என்று...!
என் மனதில்..!
நீ மட்டும் தான் என் உள்ளத்தில்
இருக்க வேண்டும் என்பதால்,
கடவுளை என் மனதை விட்டு
வெளியே அனுப்பி விட்டேன்.
கடவுளுக்கென்ன தூணிலும்
இருப்பார் துரும்பிலும் இருப்பார்.
ஆனால் உன்னால் என் மனதில்
மட்டும் தானே இருக்க முடியும்...!
நாம் சென்ற இடமெல்லாம்
உன்னை நினைவூட்டுகிறது
நீ இல்லாமல் நான் அங்கு
செல்லும் போது...!
கவலை..!
எதைக்கொண்டு வந்தோம்
இல்லை என்று அழுவதற்கும்,
இழப்பதற்கும்...!
இறைவனுடையது
எல்லோரும் கொடுத்ததைத் தான்
கேட்கிறார்கள்...!
அது போலவே இறைவனும்
கேட்கிறான் உயிரை...!
இயற்கையை அனுபவிக்கத்
தானே தவிர எதையும்
சொந்தம் கொள்ள அல்ல....!
இழந்தவர்களுக்கு
மட்டும்தான் புரியும்
இழப்பின் வலியும்
இழந்ததின் வேதனையும்...!
பிரிந்த பிறகு தான்
அதிகமாக நினைக்க
வைக்கிறது இந்த மனது...!
மனதின் மாற்றம்..!
எல்லோரும் ஒரே மனதில்
தங்கி விட முடியாது...!
அதற்கான கொடுப்பினை
கடவுள் கொடுக்கவில்லை...!
காதல்..!
வெற்றிடத்தைக்
காற்று வந்து
நிரப்புவது போல
உன் மனதில் உள்ள
வெற்றிடத்தை
என் காதல் வந்து
நிரப்பட்டுமே...!
பெண்..!
இன்று மலர்ந்த மலரைப் போல
என்றோ மலர்ந்த ஒரு மலர்
வாடாமல் உள்ளத்தில் வாடி
கருகுகிறது பெண் என்ற உருவில்...!
மாற்றம்..!
நேற்று பூத்த அழகான
மலர் தான் இன்று
அசிங்கமாக வாடி விட்டது,
அழகும் அசிங்கமும்
வேறில்லை, இங்கு எல்லாம்
இயற்கையின் மரு உருவமே...
ஏனெனில் ஒன்றில் தான்
மற்றொன்று மறைந்துள்ளது...!
பழைய நினைவு..!
இழந்தவைகளின் நினைவுகள்
மெல்ல மெல்ல நம்மை இழக்க
வைத்து விடுகிறது....!
சூழ்நிலை..!
எவ்வளவோ வசதிகள்
இருந்தும் நேரிலும்
கைப்பேசியிலும்
பேசிக் கொள்ள
முடியாமல் போகும்
பொழுதுகளில்....
நான் மனதோடு பேசிக்
கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளோடு...!
பிடித்தவர்களிடம்
பேசுவதற்கு எவ்வளவோ
வழிகள் இருந்தும் வேறு
வழியில்லாமல் நாம்
பேசாமல் போகிறோம்...!
உன்னை பற்றி நினைக்க
உனக்கு நேரம்
இருக்குமோ இல்லையோ
என்று தெரியவில்லை....
அதனால் தான்
உனக்கும் சேர்த்து
உன்னை நினைத்துக்
கொள்கிறேன் நான்....!
ஏதோ ஒன்றுக்காகத் தான்
காத்திருக்கிறோம் - தினம்
ஏதோ ஒன்றுக்காகத் தான்
ஓடிக்கொண்டிருக்கிறோம்.
எனக்குப் பிறகு
உன் நினைவுகளை
சுமந்துக் கொண்டு
உன்னை நினைத்துக்
கொண்டிருப்பதற்காகவே
நான் விட்டுச் செல்லும்
நினைவுகள் தான்
என் கவிதைகள்....!
நினைவு சிறை..!
உன் நினைவுகளுக்குள்
நான் ஆயுள்
கைதியாகவே
தினமும் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்...!
பயணம்..!
நீ சாய்வதற்காகவே
வைத்திருக்கும் என்
தோள்களில் யார்
யாரோ தூங்கி சாய்ந்துக் கொள்கிறார்கள்
பேருந்து பயணத்தில்...!
அவள் பார்வை..!
எல்லோரையும் பார்க்க
ஒரு பார்வை என்றும்
என்னைப் பார்க்க
ஒரு பார்வை என்றும்
வைத்திருக்கிறாய்....!
வெட்கம்..!
என்னைக் கண்டதும்
யாருக்கும் தெரியாமல்
நீ வெட்கப்படுவதை
நினைத்துப் பார்க்கும்
பொழுதெல்லாம்
யாருக்கும் தெரியாமல்
நான் வெட்கப்பட்டுக்
கொள்கிறேன்
கண்ணாடி முன் நின்று...!
நியாபகம்..!
உன்னை எப்பொதும்
நினைத்துக் கொண்டே
இருக்கிறேன் என்று
நினைக்காதே....
உன்னை நினைப்பதால்
தான் நான் இருக்கிறேன்...!
என் மகிழ்ச்சி..!
கவலை
மகிழ்ச்சியைத்
தொடர்வதைப்
போல...
என் கவலைக்கு
உன் நினைவுகளே
மகிழ்ச்சியாகத்
தொடர்கிறது....!
சொல்லிய நேரத்திற்கு
வராமல் நொடிக்கு நொடி
தாமதமாகும் நேரத்தில்
உள்ளத்தில் வெடிக்கும்
எரிமலையை... உன்
பாச மழையைக் கொட்டி
அணைத்து விடு... என்
மனம் குளிர்ந்து விடும்...!
நடை பயணம்..!
உன் நினைவுகளோடு
நான் நடை பயிற்சி
செல்லும் போது அது
நடை பயணமாகவே
நீண்டு விடுகிறது....!
நீ அப்பா செல்லமா
இல்லை நீ அம்மா
செல்லமா என்று
தெரியவில்லை.....
ஆனால் நான் என்றும்
எப்போதுமே
உன் ஞாபகத்தின்
செல்லம் மட்டும் தான்...!
நேசம்..!
யாரையும் விருப்பு
வெறுப்பு இல்லாமல்
நேசித்தால் உனக்கு
எப்போதும் துன்பம்
இல்லை அவர்களால்.
உள்ளத்தின் சொந்தக்காரன்..!
இல்லத்திற்கு சொந்தக்காரன்
அதன் உள்ளே இருப்பதை
அறிவான், அது போல
அவள் உள்ளத்திற்கு
சொந்தக்காரன் நான்
அறிவேன் அவள்
மனதில் உள்ளதை...!
நினைவு..!
உன்னை விட்டு நான்
பிரிந்து இருந்தாலும்
நான் உயிரோடு தான்
இருக்கிறேன் உன்
நினைவுகள் என்னை
விட்டு பிரிந்து
செல்லாததால்....!
நினைவு..!
ஓயாமல்
உன்னையே
நினைக்கிறேன்
என் ஓய்விலும்
உன்னையே
நினைக்கிறேன்...!
காத்திருப்பு..!
காத்திருப்பதும்
சுகம் தான்
நினைவெல்லாம்
நீயாக இருப்பதால்...!
உன்னோடு வாழ நான்
என்ன கொடுப்பினை
செய்திருக்க வேண்டும்
என்று தெரியவில்லை....
ஆனால் நான் என்ன
கொடுப்பினை செய்தேனோ
தெரியவில்லை உன்
நினைவுகளோடு நான்
தினம் வாழ்ந்துக்
கொண்டிருக்கிறேன்....!
நினைவின் அழகு..!
நிலா இல்லாத நாட்களில்
வானத்தை நட்சத்திரங்கள்
அழகாக்குகின்றன...!
நீ இல்லாத நாட்களில்
உன் நினைவுகள்
அழகாக்குகின்றன
என் வாழ்க்கையை...!
Comments
Post a Comment