Thank you, Shah, for sharing the powerful thought that one skill can create magic in personal, financial, and every area of life.
Today’s I was truly extraordinary, and I am confident it will bring a tremendous positive change in my life.
I’ve learned the value of admitting mistakes, standing by others, and making people feel important through genuine listening and appreciation. The reminder to focus on actions rather than labeling people, and to avoid criticism, complaints, or condemnation, is something I will carry forward.
Today’s session on money was truly enlightening. It gave me a fresh perspective on choosing the right source of income, especially through SMS, and on how we can add genuine value to society. I deeply connected with the thought that allowing money to flow naturally is far better than constantly chasing it or setting goals only around money.
The point “Water is Wealth” really stood out to me. I look forward to hearing more from Sasi on this, as I have experienced something similar in the past and would love to understand it better. The other discussions—time versus money, the attitude of never giving up, and tapping into the subconscious mind—were equally powerful. I am especially eager to learn more about self-talk, visualization, and brain power.
The reminder about giving, especially the practice of contributing 10% to charity, truly resonated with me. I had followed this earlier but lost touch with it over time. This session has inspired me to revive that practice with stronger belief.
The idea that “Money is Energy” was another highlight. Without energy, we cannot achieve anything. To build that energy, we must exercise, meditate, plan our life wisely, and set clear goals. I also loved the thought that those who are self-owned and self-driven ultimately find true peace in life.
Overall, this session shifted my mindset in a meaningful way. It reminded me of practices I had unknowingly followed before, and it motivated me to embrace them again with full awareness. I feel encouraged to continue learning and growing with these thoughts.
கோபம்,கவலை,பயம், பதட்டம், வேலைப்பளு இவையனைத்திலிருந்தும் வெளியேற ஒரே வழி நாம் இவற்றைப் பார்த்து பயப்படாமல் இவ்வைந்தும் நம்மைப் பார்த்து பயந்து ஓடவைப்பதுதான்."இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பை படாஅ தவர்" என்று வள்ளுவரே கூறுகிறாரே.
கோபம் கொள்வது ஒரு முட்டாள் தனம். அது உனக்குள்ளே உன் மனதை வெந்து நொந்து போக வைக்கும். கோபம் ஒரு போதும் உன் வாழ்க்கை நிலையை சிறிதளவு கூட உயர்த்தி விடாது. அது உன்னைக் கீழ் நிலைக்கு தள்ளி விடும் என்று எனக்குள் நான் என் மனதோடு பேசி உணர்ந்து கொண்டேன்.
கோபம் ஏமாற்றம் இது எல்லாம் எல்லாருடமும் நாம் காண்கிறோம் எதுவும் நமக்கு நடக்கும் வரை.. இன்று வீடியோ பார்க்கும் வரை நானும் அப்படித்தான் இருந்தேன் அடிக்கடி கோபம் வருகிறது ஏன் என்று புரியவில்லை ஆனால் இன்று காலை உங்கள் வீடியோவால் எனக்கு ஒரு நல்லது நடக்கும் என்று நான் நம்புகிறேன் என்னை மாற்ற முயற்சி செய்கிறேன் ஒரு சிறிய கோபம் அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வர தெரியாமல் என்னுடைய தூக்கம் சந்தோஷம் இழந்து இருந்திருக்கிறேன் இனி நான் அப்படி இருக்க போவதில்லை. ஒரு செயல் நடந்து விட்டது அதை மாற்ற முடியாது எப்படி அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வருவது என்று கற்றுக் கொண்டேன் இன்று.
மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி..?
ஒரு சின்ன பிரச்சனைனாலே என்னவோ எல்லாமே முடிஞ்சு போய்ட்ட மாதிரி டென்ஷன் ஆகிறோம்.
மன அழுத்தத்திற்கு மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்...ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணி குடிங்க..அந்த நேரத்து மனநிலை மாறும் என்று சொன்னது எனக்கு மிகவும் பிடித்தது..
சுவாசித்தலில் மெதுவாக மூச்சை இழுத்து விடும் பொழுது மன அமைதி கிட்டும்னு சொன்னது அனுபவப்பூர்வமா நான் உணர்ந்தது...நேர மேலாண்மை எவ்வளவு முக்கியம்னு உணர்ந்து கடைபிடிக்க வேண்டியது நம்ம நலனுக்கு ரொம்ப முக்கியமான ஒண்ணு..
வெளில போன பசங்க நேரத்துக்கு வீட்டுக்கு வரலைன்னா என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு மனசு பதறிட்டு எதிர்மறையா ஜெட் வேகத்துல யோசிக்கும்..
ஆனா ஒண்ணுமே இருக்காது...நம்ம பதட்டம் சுத்தி இருக்கறவங்களையும் சேர்த்து பதட்டப்பட வைக்கும். நேர்மறையான எண்ணங்கள் சரியான யோசனையை கொடுக்கணும்னு சொன்னது மிகவும் பயனுள்ளது. எந்த நேரம், எந்தமாதிரியான சூழ்நிலைக்கும் நம்ம எப்படி பதிலளிக்கிறோம் அதன் மூலமா எப்படி பிரச்சனை வராம தடுக்கலாம்னு சொன்னது அருமை..
மனம் தெளிவாக இருந்தால் உடல் மட்டும் அல்ல உறவுகளும் மேம்படும் என்பதை இன்றைய தினம் கற்றுக்கொண்டேன்.
நன்றிகள் பல🙏🙏.
இன்றைய உரையாடல் உண்மையாகவே உடலுக்கும் மனதிற்கும் மிகவும் மகிழ்ச்சியான எனர்ஜி கிடைத்துள்ளது.
ஒரு முறை பிறருக்கு தன்னால் இயன்ற உதவி செய்து பழகி விட்டால் அதனால் பயன் அடைந்தவரின் மகிழ்ச்சியை பார்க்கும் போது, அவரை விட உதவி செய்தவருக்குத் தான் பெரும் மகிழ்ச்சி அதில் கிடைக்கும்.
அளவில்லாமல் கிடைக்கும் இந்த மகிழ்ச்சியை நம் மனம் என்றும் செய்வதை விட்டு விட மறக்காது. அது மீண்டும் மீண்டும் உதவி செய்து அந்த மகிழ்ச்சியை பெற நம்மை தூண்டி கொண்டே இருக்கும்.
அதனால் நாம் பெறும் பாஸிட்டிவ் எனர்ஜி நம்மை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு போகும்.
இந்த பிரபஞ்சம் ஒரு கண்ணாடி போல நாம் எதை இங்கு கொடுக்கிறோமோ அதையே நமக்கு எதோ ஒரு வைகையில் ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதை நம்மக்கே அது திரும்ப கொடுக்கிறது.
நன்றி உணர்வு அனைத்து தடைகளையும் தாண்டி நம்மை காப்பாற்றும்.
எதையும் எதிர் பாராமல் செய்யும் உதவி எதிர்பாராத அளவிற்கு எதிர்பாராத நேரத்தில் நம்மை வந்தும் சேரும்.
நம் எண்ணங்களும், உணர்வுகளும் சேர்ந்து உருவாக்கும் எனர்ஜி, அது பாஸிட்டிவ் ஆக இருந்தால் பாஸிட்டிவ் எனர்ஜியை இழுத்து நம்மிடம் கொடுக்கிறது, அதுவே நெகடிவ் ஆக இருந்தால் நெகடிவ் எனர்ஜியை இழுத்து நம்மிடம் கொடுக்கிறது. அதனால் ஒத்த எண்ணங்களுடன் இருக்கும் போது எந்த எனர்ஜி நம்மிடம் அதிகமா இருக்கிறதோ அதைப் பொறுத்து நமது வாழ்க்கை நிலை மாறுகிறது.
எதை நினைத்து உணர்வு பூர்வமாக நம்பிக்கை வைத்து கேட்கிறோமோ அதை இந்த பிரபஞ்சம் எப்பாடு பட்டாவது அதை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது.
நான் உணர்ந்ததை இங்கு பதிவு செய்துள்ளேன். மனம் நிறைந்தது. நன்றி உணர்வுடன் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
இன்றைய நாளில் நான் கற்றுக் கொண்டது என்னவென்றால்,
1. இந்த உலகில் தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை.
2. எல்லா பிரச்சினைகளுக்கும் எல்லாம் நமக்குள்ளவே தான் இருக்கிறது, நாம் அதை தேடி கண்டு பிடித்து சரி செய்ய வேண்டும்.
3. ஒன்றை செய்வதற்கு நாம் துணிந்து விட்டால் எதோ ஒரு வழியில் நமக்கு வழி பிறகும்.
4. குடும்பங்களுடன் நேரத்தை செலவு செய்யும் போது அது நல்ல பிணைப்பை அதிகரிக்கிறது.
5. ஒவ்வொரு புத்தகமும் ஒன்றை நமக்கு கற்று கொடுக்கிறது அல்லது நமது கேள்விக்கு விடை தருகிறது.அது ஒரு நண்பன் ஆகிறது. நமது வாழ்க்கை மாற்றத்திற்கு மிகப்பெரிய உதவி செய்கிறது.
6. பிறர் நன்றியை உணரும் போது அவர்களின் மீது அதிக அன்பு மதிப்பு அதிகரிக்கிறது. உணரும் சமயத்தில் நமது மனமும் தூய்மை அடைகிறது.
7. ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டே செல்கிறது, அனைத்தும் ஒரு புள்ளியில் அதாவது பிரபஞ்சம், மனம் இதை நோக்கி தான் சேர்க்கிறது என தெளிவு எனக்கு கிடைக்கிறது.
8. நம்மை சந்திக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் நமது வாழ்க்கையை மாற்றக் கூடிய சக்தி இருக்கிறது...! அதுபோல பிறரின் வாழ்க்கை நிலையை மாற்றுவதற்கும் நமக்கு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்...!
நன்றி வாழ்க வளமுடன்.
health is wealth...
உடல் நலம் , குடும்ப நலம் இதை சார்ந்து சமூக நலம் அனைத்தும் நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம், இதில் எதாவது ஒன்றில் குறை ஏற்பட்டாலும் நமது வாழ்க்கையை பாதிக்கிறது.
உடல் நலமாக இருந்தால் தான் நாம்நினைத்ததை சாதிக்க முடியும்.
உடல் நலம் சரி இல்லை என்றால் மனம் நினைப்பதை இந்த உடல் கொண்டு எதையும் சாதிக்க முடியாது.
நோயற்ற வாழவே குறைவற்ற செல்வம் என்பது போல, பிணி இல்லாமல் உடலை பாதுகாக்க வேண்டும். திருமூலர் சொல்வது போல....
அது போல தேவையற்ற பொருளை வாங்கி நமது உடல் நிலையைநாமே கெடுத்துக் கொள்கிறோம்.
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எதையும் வாங்காமல், நமது உடல் தேவையை அறிந்து அதற்கு ஏற்ற போல உணவு பழக்கம் வழக்கம் எல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
உடல் நலத்திற்கு தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,
வேலை பளு காரணமாக சரியாக உடலை கவனிக்க மறந்து விடுகிறோம். அது பின்னாளில் பெரிய விளைவுகளை உண்டாக்கி விடுகிறது.
அதற்காக முதலில் நமக்கு நாம் நேரத்தை ஒதுக்கி நம்மை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் நலமாக இருந்தால் தான் நம்மை சார்ந்தவர்களையும், நம்மை நேசிப்பவர்களையும் நம்மால் பாதுகாக்க முடியும்....
எல்லாம் கிடைத்தும் உடல் நலம் வீணாகி போனால் நம்மால் எதையும் அனுபவிக்க முடியாமல் போய்விடும்.
நமக்கு தெரிந்த வரை பிறருக்கும் உணர்த்த வேண்டும்.
நன்றி. வாழ்க வளமுடன்..!
No comments:
Post a Comment