உலகில் எங்கு சென்றாலும்
உன்னுடன் இருந்த நிம்மதி
எனக்கு கிடைக்கவில்லையே
அம்மா...!
நாம் அன்பாக சேர்ந்து வாழ்ந்த
மகிழ்ச்சியான நினைவுகளே
இன்று என்னை துடி துடிக்க
செய்கிறதே அம்மா...!
உலகெங்கும் தேடுகிறேன் அம்மா
உன் ஆன்மாவை மீண்டும்
உன் அன்பு எனக்கு
வேண்டும் அம்மா ...!