பண ஆசையும்,
பெண் ஆசையும்,
மண்ணாசையும்
ஒரு மனிதனைக்
கட்டுப்படுத்துகிறது,
அவனுடைய
சுதந்திரத்தைப்
பறித்து விடுகிறது...!
பணத்தை இழந்தால்
மறுபடியும் சம்பாதித்துக்
கொள்ளலாம், ஆனால்
ஒழுக்கத்தை இழந்தால்
மீண்டும் பெற முடியாது.
சந்தோசம் வெளியில்
இல்லை, நாம் இருக்கும்
இடத்திலே தான் உள்ளது.
உள்ளத் திருப்தி, சின்னச்
சின்ன உதவி செய்தல்,
பிறரிடம் அன்பாக
நடந்து கொள்ளுதல்,
மிதமான பேச்சு,
பிறருக்குத் தொல்லை
இல்லாமல் இருத்தல்,
கடன் வாங்காமை, இவை
தான் சந்தோசமாகும்....!
கஷ்டப்பட்டு
சம்பாதித்த
பணம் தேவை
இல்லாததிற்கு செலவு
செய்யக்கூடாது...
சேமிப்பு மிக முக்கியம்.
சிக்கனமும் ஒரு
வருமானம் தான்.
ஆடம்பரச் செலவு
அழிவைத் தரும்....!
அதிகமான
துக்கமும் பேசாது,
அதிகமான
சந்தோசமும் பேசாது.
குறைந்த துக்கம்
உள்ளவன் புலம்பிக்
கொண்டே இருப்பான்...!
நல்ல அறிவாளிகள்
துக்கத்தையோ
சந்தோசத்தையோ
பெரிதாக எடுத்துக்
கொள்வதில்லை.
இரண்டுமே அவர்களுக்கு
ஒன்று தான்...!
நிம்மதியாக இருக்க
வேண்டுமென்றால்,
கண்டதையும்
கேட்டதையும் பிறரிடம்
சொல்லக் கூடாது.
தனிப்பட்ட ரகசியம்
எதையும் கேட்டுத்
தெரிந்துக் கொள்ளக்
கூடாது....!
நாம் செய்யும்
வேலையை பிறரிடம்
ஒப்படைக்கக் கூடாது...
பிறர் செய்யும்
வேலையில் குற்றம்
குறைகளை குத்திக்
காட்டக் கூடாது....!
நல்லவர்களின் நட்பு
நன்மையளிக்கும்
ஆனால் தீயவர்கள்
நட்பு உயிருக்கே
உலை வைக்கும்...!
உழைப்பின் மூலம்
தான் செல்வம் வரும்.
தர்மத்தின் மூலம்
தான் அது நிலைக்கும்.
செல்வத்தை தான்
மட்டும் அனுபவிக்காமல்
எல்லோருக்கும் உதவும்
படிச்செய்ய வேண்டும்....!
சிரிப்பதற்கு நேரம்
ஒதுக்குங்கள்,
அது இதயத்தின் இசை.
சிந்திப்பதற்கு நேரம்
ஒதுக்குங்கள்
அது சக்தியின் பிறப்பிடம்.
விளையாட நேரம் ஒதுக்குங்கள்,
அது இளமையின் ரகசியம்.
படிக்க நேரம் ஒதுக்குங்கள்,
அது அறிவின் ஊற்று.
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்,
அது மகிழ்ச்சிக்கு வழி.
உழைக்க நேரம் ஒதுக்குங்கள்,
அது வெற்றியின் விலை.
கடவுளிடம்
அது வேண்டும்
இது வேண்டும் என்று
கேட்கத் தேவை இல்லை.
அவருக்குத் தெரியும்
நமக்கு என்னென்ன
தேவை என்று,
மனிதர்களை நம்புவதை
விட கடவுளை
நம்புவது மேல்....!
பொறுமையைக்
காட்டிலும்
உயர்ந்த தவம் இல்லை,
திருப்தியைக் காட்டிலும்
உயர்ந்த இன்பம் இல்லை,
ஆசையைக் காட்டிலும்
உயர்ந்த தீமை இல்லை,
கருணையைக் காட்டிலும்
பெரிய அறம் இல்லை,
மன்னித்தலைக் காட்டிலும்
ஆற்றல் மிக்க
ஆயுதம் இல்லை....!
கஷ்டங்கள்
மனதிற்கு
வலிவூட்டும்.
உழைப்பு
உடலை
உறுதியாக்கும்...!
உள்ளத்தில் உறுதி,
இடைவிடாத முயற்சி,
தன்னம்பிக்கை
ஆகியவை
வாழ்க்கையின்
வெற்றிக்கு
அஸ்திவாரமாக
இருக்கும்...!
சுற்றத்தார் அனைவரும்
சுயநலம் உள்ளவர்கள்,
விலகி வாழ்வது
நிம்மதியைத் தரும்....!
தனக்கு எது
கெடுதியோ
அதைப் பிறருக்குச்
செய்ய நினைக்க
கூடாது...!
நாம் இஷ்டப்பட்டதை
கடவுள் கொடுக்க
மாட்டார். நமக்கு
தேவையானதைக்
கொடுப்பார்.
அதற்கு உன்னை
தகுதி உள்ளவனாக
மாற்றிக்கொள்ள
வேண்டும்...!
உனக்கு நல்ல
யோசனைகளை
உன்னால் தான்
தர முடியும்...
பிறர் தரும்
யோசனைகளை
ஆராயாமல் ஏற்றுக்
கொள்ளக்கூடாது...!
முகஸ்துதி செய்பவர்களை
நம்பக் கூடாது,
சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி
இனிமையாக
பேசுபவர்களை
நம்பக் கூடாது,
கசப்பாயிருந்தாலும்
உண்மை
பேசுபவர்களை நம்பலாம்....!
சந்தேகம் ஒரு
தொற்று நோய்.
அது விரோதியாக
இருந்து மகிழ்ச்சியைக்
கெடுக்கும். யாரையும்
காரணமின்றி
சந்தேகப்படக் கூடாது...!
மகிழ்ச்சியோடு
சுமந்தால் எந்தப்
பாரமும் குறைவாக
இருக்கும்...!
விரோதிக்கு
மன்னிப்பு
கொடுக்கலாம்,
ஆனால்
நண்பனாக ஏற்றுக்
கொள்ளக் கூடாது..!
கவலை
ஆயுளைக்
குறைக்கும்.
எதைப்பற்றியும்
கவலைப்படக் கூடாது.
நடப்பது நடக்கட்டும்
என்று அமைதியாக
இருக்க வேண்டும்...!
உடல் வலிகளுக்கு
மருந்திடுங்கள்
மன வலிகளுக்கு
மறந்திடுங்கள்...!
நல்ல நாக்கு ஒரு
நல்ல ஆயுதம் அதை
தவறான வழியில்
உபயோகிக்கக் கூடாது.
உருவத்தைக்
கண்டு
மயங்கக் கூடாது,
அழகான முகம்
கொடூரமான
உள்ளத்தை
மறைத்து விடும்...!
பிறர் உதவி
செய்வார்கள் என்று
எண்ணி சும்மா
இருந்து விடக்கூடாது.
நமது பத்து விரல்கள்
தான் உண்மையான
நண்பர்கள்....!
பணிவும் அடக்கமும்
தான் நிம்மதியான
வாழ்க்கையைத் தரும்,
ஆணவமும் ஆடம்பரமும்
வாழ்க்கையைச்
சீரழித்து விடும்...!
வாழ்க்கை
எப்போதும்
ஆபத்து
நிறைந்தது
நாம் எதற்கும்
தயாராக இருக்க
வேண்டும்...!
சோம்பேறிகளுக்கு
இடையில்
சுறுசுறுப்பாக
இருப்பவர்களும்,
பொய்
பேசுபவர்களுக்கு
இடையில் உண்மை
பேசுபவர்களும்,
கெட்டவர்களுக்கு
இடையில் வாழும்
நல்லவர்களும்
துன்பம்
அடைவார்கள்...!
அன்பானவர்கள்
பிறரை மகிழ்வித்து
தான் மகிழ்ச்சி
அடைவார்கள், ஆனால்
அன்பில்லாதவர்கள்
பிறரைத் துன்பப்படுத்தி
தான் மகிழ்ச்சி
கொள்வார்கள்...!
அன்பானவர்களிடம்
எதைக் கேட்டாலும்
இருப்பதைக் கொடுத்து
விடுவார்கள், ஆனால்
அன்பில்லாதவர்கள்
சிறிய பொருளைக்கூட
கொடுக்கமாட்டார்கள்,
பேராசைக் கொண்ட
சுயநலவாதியாக
இருப்பார்கள்...!
அன்பானவர்கள்
இல்லத்தில்
அன்பாக எதைக்
கொடுத்தாலும்
உண்ணலாம், ஆனால்
அன்பில்லாதவர்கள்
இல்லத்தில் எதைக்
கொடுத்தாலும்
உண்ணக்கூடாது...!
இளமையில்
கல்லாத செயல்
தீமை தரும்,
வருவாய் இல்லாத
போது தர்மம்
செய்வது
தீமை தரும்,
சுற்றத்தார்
இல்லாதபோது
கோபமடைவது
தீமை தரும்...!