1.
அவளுக்காக இவனும்...
இவனுக்காக அவளும்...
உள்ளத்தை மாற்றிக்கொண்டு
நினைவுகளில் வாழ்கிறார்கள்
தொலை தூரத்தில்...!
2.
உன் தேடலா..?
எனக்கு நீ கிடைத்தது ...
இல்லை
என் தேடலா...?
உனக்கு நான் கிடைத்தது...
நீயும் நானும்
சேர்ந்தது தானோ நமக்கு
கிடைத்த இந்த வாழ்க்கை...!
3.
தொலை தூரப் பிரிவுகள்
சேர்த்துப் பார்க்கிறது
உன்னையும் என்னையும்
நினைவுகளில்...!
4.
நீயும் நானும் சேர்ந்து
உணவு சாப்பிட்ட
கடைகள் கூட நினைவு
படுத்துகிறது உனக்கு
போதுமா இல்லை வேறேதும்
வேண்டுமா என்று கேட்டதை...
என் மனதிற்கு மட்டுமே
தெரியும் எனக்கு தேவையானது...
5.
உன் நினைவை சுமக்கும்
நேரம் தான் நான் வாழும்
இந்த வாழ்க்கையோ..!
6.
பழைய காதலின்
தொடர்ச்சி தான்
நாம் செய்யும் புதிய
காதலின் தொடக்கம்...!
7.
வாழ்வில் சந்திக்கும்
ஒவ்வொருவரைப் பற்றியும்
எழுதி வைத்துக் கொண்டு,
யாரும் படித்து விடாமல்
மறைத்து வைக்கப்படுகிறது
உன் மனப்புத்தகம்...!
8.
நம்மை தொல்லையாக
நினைத்தவர்களை,
நாம் இல்லையென்றால்
அவர்களை தொல்லை
செய்வதற்கு கூட யாரும்
இல்லை என்று நினைக்க
வைத்து விடும் இந்த காலம்.
9.
அன்பிற்கு மதம் பிடித்து
வருவதே சந்தேகம்...!
10.
அவளின் அன்பிற்குள் தானே
அடங்கி கிடக்கிறான் ஆண்...!
11.
நேற்றைய
நினைவில்லாமல்
இன்றைய
நினைவில்லை...!
12.
நினைக்காத
நிமிடம் இல்லை,
நினைக்காமல்
வாழ்வே இல்லை..!
13.
வாழ்க்கைப் பயணத்தில்
அவரவர் நிறுத்தத்தில்
நம்மை விட்டு
இறங்கிக் செல்பவர்கள்
தான் அனைவரும். யாரும்
கடைசி வரை நம்முடன்
பயணிப்பதில்லை...!
14.
உள்ளம் கண்டு
வரும் ஆசை காதல்...!
உடல் கண்டு வரும்
ஆசை காமம்...!
15.
இங்கு உயிரோடு
இருக்கும் அனைவரும்
ஏற்கனவே செத்துப்
போனவர்கள் தான்...!
16.
காதலில் தோல்வி
கண்டவர்களுக்கு
ஒவ்வொரு இரவும் அவர்கள்
அழுவதற்காகவே வருகிறது..!
No comments:
Post a Comment