1.
தூக்கி எறியப்படும்
தருணங்களில் தான்,
சிறகை விரிக்க
வாய்ப்பு கிடைக்கிறது..!
2.
நீ அன்பு வைத்தது
முகமா, முகமூடியா
என்பதை அறியும் வரை
யாரிடத்திலும் அதிக
நம்பிக்கை வைக்காதே..!
3.
எதிர்காலம்
உள்ளங்கை
ரேகையில் இல்லை
அது உன் உள்ளத்தில்
உள்ளது...!!
4.
உயர்ந்த பின்
உதவும் உறவை விட,
விழுந்த பின்பும்
உதவும் உறவே
சிறந்தது..!
5.
ஏமாற்றம்
வலியை தந்தாலும்
நல்வழியை
காட்டும் வாழ்க்கைக்கு..!
6.
யாரை மறக்க
நினைக்கிறாயோ
அவர்களை தான்
தினமும் நினைப்பாய்..!
7.
மனநிலை சமநிலையில்
இருப்பவர்களால் மட்டுமே
என்றும் உயர்நிலையை
அடைய முடியும்..!
8.
நம்மால் நன்மைகள்
செய்ய இயலாவிட்டாலும்...
நம் மனதில் இருக்கும்
நல்ல சிந்தனைகள்
நம்மை அறியாமல்
நன்மைகளாய்
வெளிப்பட்டுவிடும்..!
9.
ஆட்கொள்பவனும் இறைவனே
ஆட்டுவிப்பவனும் இறைவனே..!
அதை மறந்து, அகங்காரத்திலும்
ஆணவத்திலும் ஆடுபவர்களே
மனிதர்கள் ஆவர்..!
10.
தானமாக இருந்தாலும் சரி..!
அன்பாக இருந்தாலும் சரி..!
நம் மனதின் ஆழத்திலிருந்து
முழுமையாக கொடுக்காதவரை
அதன் சிறப்பு தெரிவதில்லை.!
11.
வாழ்க்கைப் பயணத்தில்
ஒவ்வொரு நாளும்
புதிய அனுபவத்தை
தருகிறது.. அதை நாம்
கற்றுக்கொண்டு
நாளை சிறப்பாக
அமைத்துக்கொள்ள வேண்டும்..!
12.
உங்கள் அன்பு
எந்த இடத்தில்
நிராகரிக்கப்பட்டாலும்
இழப்பு உங்களுக்கு
இல்லை..!
நிராகரித்தவருக்கே.!
13.
யாராக இருந்தாலும் சரி
அதிகம் பேசாமல்
அளவோடு பேசி வந்தால்
அனைவருக்கும் நலம்..!
14.
எதுவாக இருந்தாலும்
அது நமக்கு
ஏதுவாக இருக்குமா...
என்று சிந்தித்து
செயல்படுவோமாயின்
சிந்தனைகள் அனைத்தும்
சிற்பியின் சிற்பம் போல்
சிறந்து விளங்கும்..!
15.
சிலரை ஏன்
சந்தித்தோம் என்றும்
சிலரை ஏன்
இவ்வளவு தாமதமாக
சந்திக்க நேர்ந்தது
என்றும் தோன்றுவதே
வாழ்க்கை..!
16.
நம்மை பற்றி
யார் என்ன நினைத்தால்
நமக்கு என்ன...?
நம்மை பற்றி
நாம் அறியாததை
அவர்கள் அறிந்திட
போகிறார்கள்..!
17.
உரிமை இல்லாத
இடத்தில் ஒரு
துளியும் அன்பு
கொள்ளாமல்
இருப்பது தான்
நல்லது..!
18.
யார் என்ன சொல்வார்கள்
என பயந்து வாழ்ந்தால்
காலம் முழுவதும்
அடிமையாக
இருக்க நேரிடும்..!
எதையும் துணிந்து செய்..!
19.
வாழ்க்கைக்கு உதவாத
எதையும் குப்பையாக
தூக்கி எறியப்பழகுங்கள்..!
20.
ஆயிரம் நன்மைகளை
செய்திருந்தாலும்
நீங்கள் புரிந்த ஒரு
தவறினை மட்டுமே
சுட்டிக்காட்டும்
உலகம் இது..!
ஆகையால் எதிலும்
கவனம் தேவை..!
21.
உயர்நிலை அடைவதை
காட்டிலும் மிகவும்
கடினமான இலக்கு
சமநிலையை அடைந்து
சாகசம் புரிவதே ஆகும்..!
22.
மாற்றம்
வேண்டுமெனில்
முதலில் நாம்
மாற வேண்டும்..!
23.
நம் எண்ணங்களும்
உணர்வுகளும் சிந்தனைகளும்
சொல்களும் செயல்களும்
நம்மை சுற்றி உள்ள
மனிதர்களுக்கு
நல்லது செய்யும் எனில்..
இறைவனை நாம் தேட
வேண்டியதில்லை...
இறைவனே நம்மை
தேடி வருவார்...!
24.
வாழ்க்கை ஒரு
நிமிடத்தில் மாறுமா
என்று தெரியவில்லை
ஆனால், ஒரு
நிமிடத்தில் எடுக்கும்
முடிவு நம் வாழ்க்கையே
மாற்றி விடும்..!
25.
அன்பு என்பது
மூச்சுக்காற்று மாதிரி
அது இருப்பது
நமக்கு தெரியாது...
ஆனால் அது இல்லாமல்
நம்மால் வாழ முடியாது..!
26.
நீ மகிழ்ச்சியுடன்
இருக்கும் போதும்...
கவலையுடன்
இருக்கும் போதும்...
உனது நிலையை
மறக்காதே...
ஏனேனில் அச்சமயம்
உனது நிதானத்தை
இழப்பாய்..!
27.
உன் மூலமாக
நடத்தப்படும் எந்த
ஒரு நிகழ்வும்
உன்னால் நடப்பவை
அல்ல..!
உன்னை வைத்து
நடத்தப்படுகின்றன
நீ ஒரு கருவி..!
தேவைப்படும்போது நீ
தேர்ந்தெடுக்கப்படுவாய்..!
No comments:
Post a Comment