Skip to main content

தொலைதூரக் காதல் மற்றும் கணவன்-மனைவி பிரிவின் வலி: முழுமையான உணர்வுசார் வழிகாட்டி (Long-Distance Relationship Guide)

  அறிமுகம்: தொலைதூர வாழ்க்கையும் இன்றைய சூழலும் இன்றைய நவீன காலகட்டத்தில், மனித வாழ்க்கை பொருளாதார ஓட்டத்தை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. குடும்பத்தின் எதிர்காலம், குழந்தைகளின் நல்ல கல்வி, கடன் சுமை இல்லாத வாழ்வு மற்றும் சிறந்த வேலைவாய்ப்புகளுக்காக கணவன் அல்லது மனைவி தங்களின் வாழ்விடத்தை விட்டு வேறு நகரங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ (NRI Life) செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் இந்தத் தொலைதூரப் பிரிவு (Long-Distance Marriage) என்பது வெறும் இரு உடல்களுக்கு இடையிலான தூரம் மட்டுமல்ல; அது இரு மனங்களின் அளப்பரிய உணர்வுப் போராட்டமாகும். காதல், பிரிவு, அன்பு, ஏக்கம், தனிமை என அத்தனை உணர்வுகளும் ஒன்றாகக் கலந்த ஒரு விசித்திரமான வாழ்க்கை முறை இது. இந்த விரிவான கட்டுரையில், தொலைதூரக் காதலின் ஆழம், பிரிவில் வாழும் கணவன்-மனைவியின் மனநிலை, அந்த வலியைத் தாங்கும் உளவியல் வழிகள் மற்றும் தம்பதியரிடையே அன்பை நிலைநிறுத்தும் உத்திகள் பற்றி விரிவாகக் காண்போம். 1. பிரிவின் வலியும் ஏங்கிய நிலவும் (The Emotional Pain of Separation) பகல் நேரத்துப் பரபரப...

வெளிநாட்டு வாழ்க்கை – கனவுகளுக்காக விற்கப்படும் நாட்களின் கதை...!

வெளிநாட்டு வாழ்க்கை – கனவுகளுக்காக விற்கப்படும் நாட்களின் கதை...!

அறிமுகம்


​சொந்த மண்ணை விட்டு, பிறந்த ஊரை விட்டு, பெற்றோர் மற்றும் குடும்பத்தைப் பிரிந்து ஒரு வெளிநாட்டு மண்ணில் கால் பதிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனின் சிரிப்பிற்கு பின்னாலும் ஒரு பெரிய தியாகமும், சொல்லப்படாத கண்ணீரும் ஒளிந்திருக்கிறது.


​குடும்பத்தின் வறுமை தீர வேண்டும், உடன்பிறந்தவர்களின் எதிர்காலம் சிறக்க வேண்டும், பெற்றவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் பலரும் தங்கள் சொந்தக் கனவுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, அயல்நாட்டில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


​அப்படிப்பட்ட ஒரு வெளிநாட்டு வாழ் பிரவாசியின் மனக் குமுறலையும், தாய்நாட்டின் மீதான ஏங்கலையும் விவரிக்கும் ஒரு கவிதை பதிவுதான் இது.


வெளிநாட்டு மண் – கவிதை


​“குடும்பத்திற்காக

நமது கஷ்டங்கள் தீருவதற்காக

நமது எல்லோருடைய மகிழ்ச்சிக்காக

எதை இழப்பதற்கும் துணிந்து...

கனவுகளை அல்ல,

என் நாட்களையே விற்றுக் கொண்டிருக்கிறேன்

இந்த வெளிநாட்டு மண்ணில்…


​விடியல்கள் இங்கே தொடங்கினாலும்,

என் மனம் இன்னும் வீட்டு வாசலில் தான்

நின்று கொண்டிருக்கிறது.


அம்மாவின் குரல் போனில் கேட்கும் போதெல்லாம்,

சம்பளத்தை விட அந்த வார்த்தைகளே

என்னை உயிரோடு வைத்திருக்கின்றன.


​“எப்போ வருவாய்?” என்ற கேள்வி

எல்லாம் சேர்ந்து இந்த பிரிவு எனக்கு

அன்பாகவே வலிக்கச் செய்கிறது.

​நாட்களை எண்ணிக் கொண்டே

நான் வேலை செய்கிறேன்,

நாட்களை எண்ணிக் கொண்டே

நீங்கள் காத்திருக்கிறீர்கள்…!

​ஒரே ஒரு வித்தியாசம் தான்,

நான் இங்கு பணம் சேமிக்கிறேன்,

நீங்கள் அங்கு என் நினைவை சேமித்து வைத்திருக்கிறீர்கள்.


​ஒருநாள், இந்த வெளிநாட்டு மண் என்னை விடுவிக்கும்,

அன்று என் கால்கள் அல்ல,

என் மனம் தான் உங்களை காண முதலில் வீட்டுக்கு ஓடி வரும்…!


​என் கையில் பணம் இருக்கும்…

ஆனால் என் உள்ளத்தில் திரும்பப் பெற முடியாத

ஒரு காலம் இல்லாமல் போயிருக்கும்…!


​இவண்: ராஜா 👑



கவிதையின் பின்னணியும் ஆழமான விளக்கமும்


1. விற்பனையாகும் இளமைக் காலம்


​வெளிநாட்டிற்கு வரும் போது நாம் வெறும் உழைப்பை மட்டும் கொடுப்பதில்லை; நமது பொன்னான இளமைக் காலத்தையும், குடும்பத்தோடு செலவிட வேண்டிய அரிய நாட்களையுமே விற்கிறோம். இங்கே விடியும் ஒவ்வொரு காலைப் பொழுதும் வேலை, இலக்கு, சம்பளம் என்ற இயந்திரத்தனமான ஓட்டத்திலேயே முடிகிறது. ஆனால், மனமோ எப்போதும் சொந்த ஊர் வாசலிலும், தாய் வீட்டின் முற்றத்திலும்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது.


2. போன் அழைப்புகளும் அம்மாவின் குரலும்


​ஒரு பிரவாசிக்கு மாதச் சம்பளத்தை விட அதிக ஆற்றலைத் தருவது தாய் அல்லது குடும்பத்தினரிடமிருந்து வரும் ஒரு தொலைபேசி அழைப்புதான். "சாப்பிட்டாயா?", "உடம்பைப் பார்த்துக் கொள்", "எப்போ ஊருக்கு வருவாய்?" என்ற அந்த அன்பான விசாரணைகள் தான், எத்தனை பெரிய மன அழுத்தத்தையும் தாங்கிக் கொண்டு அடுத்த நாளை எதிர்கொள்ளும் நம்பிக்கையைத் தருகின்றன.


​3. சேமிப்பும் இழப்பும்


​இங்கே வெளிநாட்டில் இருப்பவர் பணத்தைச் சேமிக்கிறார்; ஆனால் ஊரில் இருக்கும் குடும்பத்தினரோ அவருடைய நினைவுகளை மட்டுமே சேமித்து வைக்க முடிகிறது. ஒரு நாள் கையில் நிறைய பணத்தோடு தாய்நாடு திரும்பினாலும், தவறவிட்ட இளமைப் பருவம், குடும்பத்தினருடன் கொண்டாடத் தவறிய திருவிழாக்கள், தங்கி வாழ்ந்த சந்தோஷ தருணங்கள் என எதையுமே மீண்டும் விலைக்கு வாங்க முடியாது என்பதுதான் வெளிநாட்டு வாழ்க்கையின் கசப்பான உண்மை.

முடிவுரை


​வாழ்க்கையின் சமநிலையை (Balance) நோக்கிய ஓட்டத்தில், தியாகங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிடுகின்றன. எனினும், இந்த வெளிநாட்டு மண் நம்மை விடுவிக்கும் அந்த ஒரு நாளுக்காகவும், குடும்பத்தோடு மீண்டும் இணையப் போகும் அந்த இனிய தருணத்திற்காகவும் தான் ஒவ்வொரு வெளிநாட்டுத் தமிழனும் தன் நாட்களை எண்ணிக் கொண்டு வாழ்கிறான்.

​வாழ்க்கை என்பது வெறும் பணம் ஈட்டுவது மட்டுமல்ல, அந்தப் பணத்தைக் கொண்டு நம் அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவழிப்பதுதான் உண்மையான சுதந்திரம்.

Comments

Popular posts from this blog

தேய்ந்து கொண்டிருக்கும் இளமை...!

தேய்ந்து கொண்டிருக்கும் இளமை கவிதை: எதிர்காலத்தைத் தேடி தேடியே தேய்ந்து விடுகிறது இன்றைய இளமை…! முன்னுரை இன்றைய இளமை, கனவுகளாலும் எதிர்பார்ப்புகளாலும் நிரம்பிய காலமாக இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், அந்த இளமை மெதுவாக தேய்ந்து கொண்டிருக்கிறது. எதிர்காலம் என்ற பெயரில் ஓடும் ஓட்டத்தில், இன்றைய மகிழ்ச்சியும் நிம்மதியும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கவிதை, அந்த மறைக்கப்பட்ட வலியை மிக எளிமையாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்துகிறது. இன்றைய இளைஞர்களின் நிலை ஒருகாலத்தில் இளமை என்றால் உற்சாகம், கனவுகள், தைரியம், விளையாட்டு என்று நினைத்து கொண்டிருந்தோம். இன்று அதே இளமை, போட்டி, அழுத்தம், பயம், குழப்பம் என்ற வார்த்தைகளோடு இணைந்து நிற்கிறது. வேலை, பணம், சமூக மதிப்பு, குடும்ப பொறுப்பு – இவை அனைத்தையும் சுமந்தபடி, இளமையும் தனக்கான நேரத்தையும் இழந்து விடுகிறோம். பல இளைஞர்கள் தங்கள் ஆசைகளை தள்ளி வைத்து, மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ஓடுகிறார்கள். அந்த ஓட்டத்தில் சிரிப்பு குறைந்து, சிந்தனை கனமாகி, மனம் மெதுவாக சோர்ந்து விடுகிறது. எதிர்காலம் vs இன்றைய நிம்மதி எதிர்காலம் முக்கியம் தான்....

வாழ்க்கை தத்துவங்கள் | philoshopy quotes

இளமையில் வரும் வறுமையும், முதுமையில் வரும் செல்வமும் துன்பத்தை தரும்...! பண ஆசையும், பெண் ஆசையும், மண்ணாசையும் ஒரு மனிதனைக் கட்டுப்படுத்துகிறது, அவனுடைய  சுதந்திரத்தைப்  பறித்து விடுகிறது...! பணத்தை இழந்தால் மறுபடியும் சம்பாதித்துக் கொள்ளலாம், ஆனால் ஒழுக்கத்தை இழந்தால் மீண்டும் பெற முடியாது. சந்தோசம் வெளியில் இல்லை, நாம் இருக்கும் இடத்திலே தான் உள்ளது. உள்ளத் திருப்தி, சின்னச் சின்ன உதவி செய்தல்,  பிறரிடம் அன்பாக  நடந்து கொள்ளுதல்,  மிதமான பேச்சு, பிறருக்குத் தொல்லை இல்லாமல் இருத்தல், கடன் வாங்காமை, இவை தான் சந்தோசமாகும்....! கஷ்டப்பட்டு  சம்பாதித்த பணம் தேவை இல்லாததிற்கு செலவு செய்யக்கூடாது... சேமிப்பு மிக முக்கியம். சிக்கனமும் ஒரு வருமானம் தான். ஆடம்பரச் செலவு அழிவைத் தரும்....! அதிகமான  துக்கமும் பேசாது, அதிகமான  சந்தோசமும் பேசாது.  குறைந்த துக்கம்  உள்ளவன் புலம்பிக்  கொண்டே இருப்பான்...! In நல்ல அறிவாளிகள் துக்கத்தையோ சந்தோசத்தையோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இரண்டுமே அவர்களுக்கு ஒன்று தான்...! நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால்...

நிலையற்ற வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்...!

நிலையற்ற வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் முன்னுரை மனித வாழ்க்கை என்பது ஒரு நிரந்தர பாதை அல்ல. இன்று நம்மிடம் இருப்பது நாளை இல்லாமல் போகலாம். இன்று சிரிப்பை தருவது, நாளை கண்ணீராக மாறலாம். இதை புரிந்துகொள்ளாமல், வாழ்க்கையை நிரந்தரம் போல நம்பி வாழும் போது தான் அதிகமான வலியும் ஏமாற்றமும் உருவாகிறது. நிலையற்ற வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என்பது நம்பிக்கையின்மை அல்ல; அது வாழ்க்கையை உணர்ந்து வாழ கற்றுக்கொள்ளும் ஒரு உயர்ந்த விழிப்புணர்வு. வாழ்க்கை ஏன் நிலையற்றது? வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை. காலம் மாறுகிறது, சூழ்நிலைகள் மாறுகின்றன, மனிதர்களும் மாறுகிறார்கள். இன்று நம்முடன் இருப்பவர்கள் நாளை தூரமாகலாம். இன்று நம்மை மதிப்பவர்கள் நாளை மறக்கலாம். இளமை முதிர்ச்சியாக மாறுகிறது ஆரோக்கியம் நோயாக மாறுகிறது செல்வம் வறுமையாக மாறுகிறது உறவுகள் தூரமாக மாறுகின்றன இந்த மாற்றங்களே வாழ்க்கையின் இயல்பு. நிலையற்ற வாழ்க்கையின் மீது அதிக நம்பிக்கை வைத்தால் என்ன நடக்கும்? 1. ஏமாற்றம் அதிகரிக்கும் நிரந்தரம் என நினைத்து நம்பியவை மாறும் போது, மனம் உடைந்து விடுகிறது. 2. மனிதர்கள் மீது...