உறவுகளின் உலகம் – காதல் முதல் சமூக வரை: மனித உறவுகளை புரிந்து கொள்ளும் முழுமையான வழிகாட்டி
முன்னுரை
உலகத்தில் எல்லா மனிதர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு சக்தி இருக்கிறது என்றால், அது உறவுகள் தான். மொழி, நாடு, கலாச்சாரம், மதம் மாறினாலும், மனிதனின் உணர்வுகள் ஒன்றே. காதலில் ஏற்படும் எதிர்பார்ப்பு, நட்பில் வரும் ஏமாற்றம், குடும்பத்தில் உருவாகும் அழுத்தம், வேலை செய்யும் இடத்தில் வரும் போட்டி, சமூகத்தில் கிடைக்கும் விமர்சனம் – இவை அனைத்தையும் உலகின் எந்த மூலையில் வாழும் மனிதனும் ஒருமுறை அனுபவித்திருப்பான்.
உறவுகள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும். அதே நேரத்தில், அவை சரியாக கையாளப்படவில்லை என்றால், வாழ்க்கையின் மிகப்பெரிய வலியாகவும் மாறும். இந்த பக்கத்தில், காதல், நட்பு, குடும்பம், உறவினர்கள், வேலை செய்யும் இடம், சமூக உறவுகள் என ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆழமாக புரிந்து கொண்டு, அவற்றில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள், அவற்றின் அடிப்படை காரணங்கள் மற்றும் சரி செய்யும் நடைமுறை வழிமுறைகளை விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
உறவுகள் ஏன் சிக்கலாகின்றன?
உறவுகள் சிக்கலாகுவதற்கு அன்பு இல்லாததே காரணம் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையில், அன்பு இருக்கும் இடத்திலேயே அதிக வலி உருவாகிறது. காரணம் – எதிர்பார்ப்பு, ego, புரிதல் குறைவு, பேச்சு தொடர்பு இல்லாமை.
ஒவ்வொரு மனிதனும் தனித்தனி அனுபவங்களால் உருவானவன். அந்த வேறுபாடுகளை புரிந்து கொள்ளாமல், ஒரே மாதிரி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் போது தான் உறவுகளில் விரிசல் தொடங்குகிறது.
காதல் உறவுகள் – உணர்வும் எதிர்பார்ப்பும்
காதல் என்பது இரண்டு மனங்கள் ஒன்றை ஒன்று தேர்வு செய்வது. ஆனால் காலப்போக்கில், அந்த தேர்வு உரிமையாகவும், கட்டுப்பாடாகவும் மாறும் போது பிரச்சினைகள் தொடங்குகின்றன.
காதலில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள்
சந்தேகம் மற்றும் நம்பிக்கை குறைவு
அதிக உரிமை உணர்வு
எதும் பேசி தீர்க்காமல் மனதில் வைத்துக்கொள்வது
எதிர்பார்ப்புகள் நிறைவேறாத ஏமாற்றம்
காதல் உறவுகளை சரி செய்யும் வழிகள்
காதலில் கூட தனிப்பட்ட சுதந்திரம் அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
சந்தேகத்தை வளர்ப்பதைவிட, சந்தேகத்தை வெளிப்படையாக பேச கற்றுக்கொள்ள வேண்டும்
அன்பு கட்டுப்பாடு அல்ல; அது பாதுகாப்பு உணர்வு என்பதை உணர வேண்டும்
உண்மையான காதல், ஒருவரை மாற்ற முயல்வது அல்ல; அவரை புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்வதே.
நட்பு உறவுகள் – கணக்கில்லாத பந்தம்
நட்பு என்பது தேவைக்காக எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் உருவாகும் ஒரு அழகான உறவு. ஆனால் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது, அந்த அழகு மெதுவாக கசப்பாக மாறும்.
நட்பில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள்
தேவைக்கேற்ப நட்பு
பொறாமை
ரகசியங்களை காப்பாற்றாதது
வாழ்க்கை மாற்றங்களால் உருவாகும் இடைவெளி
நட்பை காப்பாற்றும் வழிமுறைகள்
எல்லா நட்பும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்
காலம் மாறினாலும் நினைவுகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்
நட்பில் கணக்குப் பார்க்காத மனநிலை அவசியம்
உண்மையான நட்பு தினமும் பேசுவதில் இல்லை; தேவைப்படும் போது கூட இருப்பதில் உள்ளது.
குடும்ப உறவுகள் – பாதுகாப்பும் அழுத்தமும்
குடும்பம் மனிதனுக்கு முதல் உறவு. அது பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில், எதிர்பார்ப்புகள் மற்றும் ஒப்பீடுகள் காரணமாக, குடும்பமே அதிக அழுத்தம் தரும் இடமாக மாறுகிறது.
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள்
அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்காதது
பெற்றோர்கள்–பிள்ளைகளை புரிந்து கொள்ளாமல் இருப்பது
மற்றவர்களோடு ஒப்பிடுதல்
உணர்வுகளை வெளிப்படுத்தாத பழக்கம்
குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் வழிகள்
ஒவ்வொரு தலைமுறைக்கும் தனித்தனி சிந்தனை இருப்பதை மதிக்க வேண்டும்
குடும்பத்தில் ஒன்றாக அமர்ந்து பேசும் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும்
அன்பை கட்டளையாக அல்ல, ஆதரவாக வெளிப்படுத்த வேண்டும்
குடும்பம் முழுமையை எதிர்பார்க்கும் இடம் அல்ல; புரிதல் தேவைப்படும் இடம்.
உறவினர்கள் – இனிமையும் இடைஞ்சலும்
உறவினர்கள் உறவை இனிமையாக்கவும் முடியும்; அவர்களால் சிக்கலாக்கவும் முடியும்.
உறவினர்களால் உருவாகும் பிரச்சினைகள்
தேவையற்ற விஷயத்தில் தலையீடு
ஒப்பீடு செய்து பேசுவது
பொறாமை
உறவினர்களுடன் சமநிலை வைத்துக்கொள்ளும் வழிகள்
எல்லோருக்கும் எல்லா விஷயமும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
தெளிவான எல்லைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்
அமைதியும் தூரமும் சில நேரங்களில் உறவுகளை காப்பாற்றும்
வேலை செய்யும் இட உறவுகள் – தொழில்முறை எல்லைகள்
வேலை செய்யும் இடத்தில் உறவுகள் தொழில்முறை வரம்பில் இருக்க வேண்டும். ஆனால் ஈகோ, போட்டி, அரசியல் ஆகியவை சிக்கல்களை உருவாக்குகின்றன.
வேலை இடத்தில் ஏற்படும் பிரச்சினைகள்
ego clashes
credit stealing
communication gap
jealousy
சரியான அணுகுமுறை
தனிப்பட்ட உணர்வுகளை வேலையுடன் கலக்காமல் இருக்க வேண்டும்
தெளிவான தொடர்பு அவசியம்
உழைப்பு பேசட்டும், ego பேச வேண்டாம்
சமூக உறவுகள் – அழுத்தமும் அடையாளமும்
சமூகம் ஒருவரை உயர்த்தவும் முடியும்; அதே நேரத்தில், அழுத்தவும் முடியும்.
சமூக உறவுகளில் சிக்கல்கள்
பிறர் சொல்லும் தவறான கருத்துக்கு பயம்
சமூக ஒப்பீடு
விமர்சனம்
சமூக மன அழுத்தத்திலிருந்து விடுபடும் வழிகள்
எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்கள் மதிப்பு பிறர் கருத்தால் நிர்ணயிக்கப்படுவதில்லை
மனநிம்மதியை சமூக ஒப்புதலுக்கு அடமானம் வைக்காதீர்கள்
எல்லா உறவுகளையும் காப்பாற்றும் பொதுவான அடிப்படைகள்
உண்மையாக இருந்தால் மட்டும் நம்ப வேண்டும்
எதிலும் பொறுமையாக இருக்க வேண்டும்
தவறுகளை மன்னிக்க வேண்டும்
ego-வை விட அன்பை முன்னிலைப்படுத்தி, அன்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
ஒருவரின் எல்லைகளை மதித்தல் வேண்டும்
முடிவுரை
உறவுகள் வாழ்க்கையின் அலங்காரம். ஆனால் அந்த அலங்காரம் சுமையாக மாறாமல் இருக்க, அவற்றை உணர்வோடும் பொறுப்போடும் கையாள வேண்டும்.
உறவுகளை காப்பாற்றுவது உலகை காப்பாற்றுவது அல்ல.
ஆனால் ஒருவரின் உலகத்தை காப்பாற்றுவது தான்.
இவண்
👑 ராஜா
Comments
Post a Comment